ராமேஸ்வரம் ரயில் சேவை நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
கர்நாடக மாநிலம் - ஹூப்ளியில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியே ராமேஸ்வரத்திற்கு வாராந்திர சிறப்பு - ரயில், இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் சேவை நடப்பு வாரத்தோடு முடிவடைய இருந்த நிலையில், பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 3 மாதத்திற்கு அதாவது வரும் ஜூன் மாதம் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜூன் 29ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
ஹூப்ளியில் காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காவேரி, பிரூர், தும்கூர், யஸ்வந்த்பூர், பனாஸ்வாடி, ஓசூர், தர்மபுரி வழியே சேலத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 10 நிமி டத்தில் புறப்பட்டு நாமக்கல்லுக்கு இரவு 8.44க்கும், கரூக்கு இரவு 9.58க்கும் சென்று திருச்சி, கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராம நாதபுரம் வழியே ராமேஸ்வரக் ராமேஸ்வரத் திற்கு அடுத்த நாள் (ஞாயிறு) காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) இன்று 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஞாயிறு தோறும் 3 மாதகாலத்திற்கு நீட்டித்து இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ரயில், நாமக்கல்லுக்கு அடுத்தநாள் அதிகாலை 4.19மணிக்கு வந்து, சேலத்திற்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்தடைகிறது. பின்னர். 10 நிமிடத்தில் புறப்பட்டு தர்மபுரி, ஓசூர், பனாஸ் வாடி வழியே ஹூப்ளிக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடைகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.