கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ மூர்த்திகள் சீதாராம திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தேங்காய் உருட்டுதல் மற்றும் பூ பந்து உருட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Tags

Next Story