பரமத்திவேலூர் தர்காவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ரம்ஜான் சிறப்பு தொழுகை.
பரமத்திவேலூர் சஹன்சா அவுலியா தர்காவில் ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சஹன்சா அவுலியா தர்காவில், ஈகை திரு நாளாம், ரம்ஜான் திருநாளையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக அண்ணா சாலையில் உள்ள தர்காவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வேலூர் பஸ்நிலையம் அருகே வரை சென்று மீண்டும் தர்காவிற்கு வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ரம்ஜான் திருநாளை கொண்டாடினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்தது பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் திருநாளை பரிமாறிக் கொண்டனர். விழாவில் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், பள்ளி வாசல் உறுப்பினர்கள் ஹாஜி இப்ராஹிம், ஜாபர், அக்பர், முபாரக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story