ரம்ஜான் : தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் : தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை 

கும்பகோணம் சாந்தி நகர் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் 5 வேளை தொழுகை செய்து இறை வழிபாடு செய்தனர். நேற்று வானில் பிறை தெரிந்ததையடுத்து இன்று(வியாழக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணம் சாந்தி நகர் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தி ஒருவரை ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இன்று காலை 7.30 மணிக்கு பெரிய பள்ளிவாசல், காஜியார் பள்ளிவாசல், ஸ்ரீந கர் காலனி, பள்ளிவாசல் ரெயில் நிலைய அருகே உள்ள பள்ளிவாசல் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடக்கிறது.

Tags

Next Story