சேலத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை - திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு

சேலத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை -  திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு

ரமலான் சிறப்பு தொழுகை

சேலத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையை சேலத்தில் நேற்று முஸ்லிம் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. சேலம் டவுன் ஜாமியா பள்ளி வாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும், முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் ஈத்கா மைதானத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பறிமாறிக்கொண்டனர்.

இதேபோன்று சேலம் கோட்டை, முள்ளுவாடி கேட், 4 ரோடு, சன்னியாசிகுண்டு, அழகாபுரம், ஏற்காடு அடிவாரம், சேலம் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட சேலத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்கள் பலர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும், உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Tags

Next Story