வாக்குப் பதிவுக்கு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு

வாக்குப் பதிவுக்கு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு

 திண்டுக்கலில் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  

திண்டுக்கலில் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், நடைபெற்ற இந்த பணிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி ஆய்வு செய்தாா். அந்தந்த தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்த்து உரிய பாதுகாப்புடன் தலைமையிடத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும். இதையடுத்து ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யும் 2-ஆம் கட்ட பணிகள் நடைபெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

Tags

Next Story