வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு ரேண்டம் முறையில் பயிற்சி

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு ரேண்டம் முறையில் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (மாா்ச் 23) சனிக்கிழமை நடைபெறுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (மாா்ச் 23) சனிக்கிழமை நடைபெறுகிறது.

மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும், அவா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையிலும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியது: 6 பேரவைத் தொகுதிகளிலும் இப்பயிற்சி வகுப்பு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன்படி, விளாத்திகுளம் தொகுதியில் எட்டயபுரம், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி தொகுதியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, திருச்செந்தூா் தொகுதியில் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனாா் கலை- அறிவியல் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ்.

மேல்நிலைப் பள்ளி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதியம்புத்தூா் ஜாண் டி பாப்பிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி தொகுதியில் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இவ்வகுப்பு நடைபெறவுள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளோருக்கு ரேண்டம் முறையில் பணி ஒதுக்குவதற்கான முதற்கட்ட நிகழ்வு நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இவ்வகுப்புகளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளோருக்கு பயிற்சி மையத்தில் குடிநீா் கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா். மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா் ம. பிரபு, தோ்தல் வட்டாட்சியா் தில்லைப்பாண்டி, மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story