100 சதவிகிதம் வாக்கு உறுதி செய்திடும் வகையில் ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு !
விழிப்புணர்வு
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சியர் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், முன்னிலையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாளை 19.4.2024 அன்று மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்கும் வகையில் ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) .கு.செல்வராசு, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.