மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா

மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 10வது ஆண்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 10 ஆண்டு பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.

தலைமையாசிரியர் சுமதி தலமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசியர் செல்வி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் விஜியா, துணை தலைவர் நிர்மலா ஆறுமுகம், பள்ளி மேலான்மை குழு தலைவர் பரமேஸ்வரி ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளான, பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நாடகம், நடன நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த பள்ளி ஆண்டு விழாவில் வார்டு உறுப்பினர்கள் வழக்கறிஞர் முரளி, கணேஷ், முருகன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story