ராணிப்பேட்டை: எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ராணிப்பேட்டையில் எம்எல்ஏ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் பஞ்சாயத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் ஆட்சியில் குடியிருப்புகள் வழங்கப்பட்டது.

அப்பொழுது 40 குடும்பங்கள் மட்டுமே இருந்தன தற்பொழுது அந்த ஆதிதிராவிட குடியிருப்புகளில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனைகாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுத்தும் இதுவரையில் எந்த ஒரு தீர்வும் காணவில்லை.

தற்பொழுது 30 குடும்பங்களுக்கு மட்டுமே இலவச வீட்டு மனை தருவதாக அரசு அறிவித்திருப்பதை கண்டித்தும் அங்கு வசிக்கும் 300 குடும்பங்களுக்கும் அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்க கோரி சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முடியிரத்தினம் அலுவலகத்தை கூடலூர் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதனை கேள்விப்பட்ட சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் விரைந்து வந்து. கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உண்டான தீர்வு குடி விரைவில் செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு கிராம மக்கள் அங்கிருந்த புறப்பட்டனர்.இதனால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்பு வெறும் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story