சிறுமி பாலியல் பலாத்காரம் - கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
நாகை மாவட்டம் கீழையூர் அருகே யாதவர் தெரு பி, ஆர் புரத்தை சேர்ந்தவர் பாபுராஜ் (31). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அதே தெருவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கீழையூர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பாபு ராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நாகை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாபுராஜிற்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடத்திற்கு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கினார். இவ்வழக்கு விசாரணை சிறப்புடன் செய்து முடித்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தர காரணமாக இருந்த கீழையூர் காவல் நிலைய அதிகாரிகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பாராட்டினார்.
Next Story