திருச்சி ஜங்ஷனில் பயணிகளின் தேவைக்காக ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்பும் வசதி

திருச்சி ஜங்ஷனில் பயணிகளின் தேவைக்காக ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்பும் வசதியை கோட்டை மேலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கான தண்ணீர் வசதியை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இதற்கு ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 பெட்டிகள் அடங்கிய ஒரு ரயிலில் தண்ணீர் நிரப்ப குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் செலவாகும். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ரூபாய் ஒரு கோடியே 57 லட்சம் மதிப்பில் ரயில்களில் விரைந்து தண்ணீர் நிரப்பும் வசதி கொண்ட புதிய அமைப்பை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 1,24,5,6,7 நடைமேடைகளில் நேற்று தொடங்கி வைத்தார். அதிக திறன் கொண்ட மோட்டார் மூலம் 24 பெட்டிகள் கொண்ட ரயில் 8 முதல் 9 நிமிடங்களில் தண்ணீர் நிரப்ப முடியும் தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தினமும் திருச்சி வழியாக செல்கிற 66 ரயில்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் ரயிலில் விரைவாக தண்ணீர் நிரப்பும் முறையை மீதமுள்ள அனைத்து நடை மேடைகளிலும் தொடங்க இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story