அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு அரிய வாய்ப்பு

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு அரிய வாய்ப்பு

மாவட்ட ஆட்சியர் 

தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023−24 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 01.01.2023 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்டு வருவாய் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் தமிழ்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்றுடன், வட்டாச்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபடுபவருக்கு திங்கள்தோறும் உதவி தொகையாக 3500 ரூபாயும், மருத்துவபடி 500 ரூபாய் அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கபடும் என்று தெரிவிக்கபட்டனவே நிறைவு செய்யபட்ட விண்ணப்பங்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story