விழுப்புரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தை

விழுப்புரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தை

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே முட்புதரில் மயங்கிய நிலையில் மீட்ட அரியவகை ஆந்தையை, பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே முட்புதரில் மயங்கிய நிலையில் மீட்ட அரியவகை ஆந்தையை, பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் உள்ள புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் முட்புதரில் நேற்று மாலை அரியவகை ஆந்தை ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு நேரில் சென்று அந்த ஆந்தையை மீட்டனர். இது பற்றி அவர்கள் கூறுகையில், இந்த ஆந்தையானது கலஞ்சிய ஆந்தை (பார்ன்அவுல்) இனத்தை சேர்ந்தது. வழக்கமாக நம் நாட்டின் பல இடங்களில் இருக்கும் அரியவகை ஆந்தை இனம்தான். இந்த வகை ஆந்தைகள், இரவுநேரங்களில்தான் இரைதேடி பல இடங்களுக்குச் செல்லும். பகல் நேரங்களில் எங்கும் செல்லாமல் மரங்களில் ஓய்வெடுக்கும். விழுப்புரம் வழுதரெட்டி, முத்தாம்பாளையம் உள்ளிட்ட ஏரி பகுதிகளில் இது இருந்திருக்கலாம். பகல் நேரத்தில் வழி தெரியாமல் பறந்துவந்து அமர்ந்துள்ளது. அந்த ஆந்தை தற்போது ஆரோக்கியமாகவே உள்ளது. இருப்பினும் கால்நடை மருத்துவரிடம் காண்பித்த பிறகு காப்புக்காடு பகுதியில் விடப் படும் என்றனர்.

Tags

Next Story