ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் சித்திரை மாத கடைசி மற்றும் வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் 12 நாட்கள் இத்திருவிழா நடைபெறும் .

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் கொடியேற்றம் நடைபெற்று தீர்த்தவாரி, பூந்தட்டு ஊர்வலம், பூச்சாட்டுதல், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை கம்பம் நடுதல் பொங்கல் திருவிழா நடைபெறும் 23.05.2024 அன்று சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்னிகுண்டம் பற்ற வைத்தல், அக்னி குண்டம் பிரவேசித்தல் அம்மன் திருவீதி உலா தொடர்ந்து 25.05.2024 சனிக்கிழமை பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல்,

சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடல், சப்தாபரணம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது என கோவில் அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் நிர்வாகக் குழுவினர், தெரிவித்தனர்.

Tags

Next Story