ராசிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

ராசிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

சிறப்பு வழிபாடு

ராசிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் எருமை கிடா பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுக்காடு பகுதியில் 200 ஆண்டு பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை தொடர்ந்து எருமை கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள மேட்டுக்காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவானது ஊர் மக்கள் சார்பாக பால்குடம் ஊர்வலத்துடன் துவங்கி பத்திரகாளி அம்மனுக்கு பொங்கல் வைத்து கரகம் எடுத்து அலகு குத்தி தங்கள் நேத்து கடனை செலுத்தினர் .மேலும் தீக்குண்டம் மிதித்தல் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாரம்பரியம் மிக்க எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கோவிலில், ஆண்டுதோறும் எருமை கிடா பலியிடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், 20க்கும் மேற்பட்ட எருமைக் கிடாக்களை நேர்த்தி கடனாக பக்தர்கள் கோவிலுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து கோவில் முன்பாக பக்தர்கள் முன்பாக இந்த எருமைக் கிடாக்களின் மீது கோவில் பூசாரி தீர்த்தம் தண்ணீரை தெளித்தார்.

இதில் முதலில் துளுக்கிய எருமைக் கிடாவை ஒருவர் ஆக்ரோஷமாக வெட்டினார். பின்னர் அந்த எருமை கிடாவை கோவிலின் அருகில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டு மூடினர்.

இவ்விழாவில், ராசிபுரம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, அலகு குத்தி, தீ மிதித்து வழிபாடு நடத்தினர்.

எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ராசிபுரம், மேட்டுக்காடு, பட்டணம், குச்சிக்காடு, புதுப்பாளையம், வடுகம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திருக்கோவில் தர்மகர்த்தாக்கள் ஆர்..பாலன், இ.சேகர், எம்.மோகன்ராஜ், பி.நீலாகிருஷ்ணன், எஸ்.ராமச்சந்திரன், ஜெ.மணிகண்டன், எம்.குமரன், எம்.பாபு, டி.பிரகாஷ், எம்.தினேஷ்குமார்,ஏ.கார்த்திக், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி. குணசேகரன், வழக்கறிஞர் த. கீதாலட்சுமி, மேட்டுக்காடு வி.எம். ரவி, ஏ. ராஜேந்திரன், ஆர்‌. ஜெயராமன், மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழு நண்பர்கள் என அனைவரும் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story