ராசிபுரம் பாஜக சார்பில் பங்காரு அடிகளாருக்கு மௌன அஞ்சலி
ராசிபுரத்தில் பாஜக சார்பில் மறைந்த மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையடுத்து தமிழகம் முழுவதும் ஆன்மீக பக்தர்கள்,ஆதிபராசக்தி ஆன்மீக குழுவினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று இராசிபுரம் நகர பாஜக சார்பில் மறைந்த ஆன்மிக செம்மல் மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவிற்கு இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சிக்கு பாஜக நகர தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மேலும் நிகழ்சியில் மாவட்டத் துணை தலைவர் வழக்கறிஞர் R.T.இளங்கோ, மாவட்ட செயலாளர்கள் தமிழரசு, திவ்யா, முடிவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.
Next Story