“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கள ஆய்வு

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ராசிபுரம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் மரக்கன்று நட்டு, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளை புதன்கிழமை தொடங்கினார். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் இருப்பு, குழந்தைகளின் வருகை, குழந்தைகளன் உயரம், எடை, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி கலந்துரையாடினார்.

பழந்தின்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் தினசரி வருகை, கற்றல் திறன், கற்ப்பிக்கும் முறை, தேர்ச்சி சதவீதம், ஆசிரியர்களின் பணியிடங்கள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், தற்போதைய பணி முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், நடுப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

வெண்ணந்தூர் இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஒப்புதல் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டறிந்து, பொதுமக்கள் சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலினை செய்து ஒப்புதல் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். வெண்ணந்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை பார்வையிட்டு, பொது பதிவேடு, தின ரொக்க புத்தகப்பதிவேடு, வைப்பு பதிவேடு, தொடர்நிலை வைப்பு பதிவேடு, சேமிப்பு கணக்கு பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்ப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, பள்ளி மாணவியர், ஆசிரியர்கள் எண்ணிக்கை, வருகை விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், மாணவியர்களுக்கான மதிய உணவை உண்டு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள தானிய கிடங்கு, நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம் சரிபார்த்து, பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் கேட்டறிந்து, பொருட்களின் இருப்பு குறித்தும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பட்டா பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தையில், காய்கறிகளின் தரம், விலை விபரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமிரா அறையை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக பரிசீலினைக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

ராசிபுரம் நகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்துகளின் இருப்பு, நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விவரங்கள் உள்ளிட்டவைகளை விரிவாக கேட்டறிந்தார். ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு விற்கப்படும் உணவுப்பண்டம், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் தரம் குறித்தும், கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகிறாத என்றும் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் அனைவரும் துணி பைகள் மற்றும் மஞ்ச பைகளை பயன்படுத்துமாறும், தயாரிக்கும் உணவுகளை தரமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வுகளில் ராசிபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர், ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன், டிஆர்ஒ., ரெ.சுமன், சிறப்பு திட்ட துணை ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் இரா.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story