சுற்றுப் பொங்கல் விழா - சாமி கண் திறப்பு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மேட்டு தெரு பகுதியில் மேட்டு தெரு நண்பர்கள் குழுவின் சார்பாக சுற்று பொங்கல் விழா நடத்திட முடிவு செய்து சனி மற்றும் ஞாயிறு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூசாரி மணி சிறப்பு பூஜை செய்து சாமி கண் திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும், முன்னாள் கவுன்சிலரும், நகர வளர்ச்சி மன்ற தலைவருமான மேட்டு தெரு வி.பாலு தலைமை வகித்தார். சாமி கண் திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் இனிப்புகள் வழங்கினர். இந்த சுற்று பொங்கல் விழாவை மேட்டு தெரு நண்பர்கள் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.