ராசிபுரம் : சாலை விபத்தில் பெண் தலைமை காவலர் பலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் வசிப்பவர் அமுதா.இவருக்கு செல்வம் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமை காவலரான இவர் குத்துச்சண்டை வீரர். விளையாட்டுத் துறையில் காவல்துறை சார்பாக தேசிய அளவில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவற்றில் பல்வேறு பதக்கங்களை நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு பெற்றுத் தந்த பெருமைக்கு உரியவர். இவர் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உள்ள வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு மையத்தில் பணி முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இநநிலையில் இரவு 1-05-24 அன்று சுமார் 11 மணியளவில் இராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி சுற்றுவட்ட சாலையில் (byepass) திருச்செங்கோட்டில் உள்ள வாக்குப்பெட்டி பாதுகாப்பு மைய காவல் பணியை முடிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் குருசாமிபாளையம் என்ற பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கல்லுமடை பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் ஈரோடு நோக்கி சென்ற ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். தலைக்கவசம் அணிந்திருந்தும் அதிவேகமாக மோதி தூக்கி வீசப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார் . சம்பவ இடத்திற்க்கு வந்த ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார்,காவல் ஆய்வாளர் செல்வராசு சடலத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து ஈரோடு மாவட்டத்திற்கு துணிகள் சலவை செய்யப்பயன்படும் கலவை தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம், மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த தலைமை பெண் காவலர் அமுதா, இராசிபுரம் அருகே உள்ள மெட்டலா அடுத்த உடையார்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது கணவர் செல்வம், விவசாயி ஆவார். மகன்கள் கவியரசு மற்றும் சோலையரசு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். அவரது உடலை சுற்றி சக காவலர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது.
தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மெட்டாலா ராஜபாளையம் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி என்னும் மையத்தில் பணி முடித்து திரும்பிய காவலர் அமுதா வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்போது அவர்களது இறுதி மரியாதை செலுத்தி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். குடும்பத்திற்கு தவிர்க்க முடியாத இழப்பாகும். அவர்களுக்கு விளையாட்டுத்துறையில் மிகவும் அனுபவம் உள்ளவர் என்றும் கூறினர். இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக தெரிவித்துள்ளோம் அதன்படி அவர்களது குடும்பத்திற்கு தேர்தல் சம்பந்தமான உயிரிழப்புக்கு 15 லட்சம் நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, நாமகிரிப்பேட்டை பகுதியில் தலைமை காவலராக சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் அமுதா அவரது இழப்பு மிகவும் வருத்தத்துக்குரியது. தேர்தல் நேர பணியில் ஈடுபட்ட போது இதுபோன்ற விபத்தில் அவர் மரணம் அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வாக்குச்சாவடி என்னும் மையத்தில் பாதுகாப்பு பணியில் எட்டு மணி நேரம் பணியை முடித்து வீடு திரும்பும் போது இது போன்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த இவற்றைக் குறித்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஆட்சியர் மற்றும் நானும் எங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளோம்.மேலும் இது சம்பந்தமாக வாகன உரிமையாளரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் கூறினார். மேலும் குடிபோதையில் வாகனம் இயக்கினாரா என்ற கேள்விக்கு அது போன்று எதுவும் இல்லை தற்செயலாக இந்த விபத்து நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதே போல் சம்பவம்: தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்ற ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், வெண்ணந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக (தாவரவியல்) பணிபுரிந்து வந்த திரு. மாதையன் மகன் ஜெயபாலன் என்பவர் 2024 பாராளுமன்ற தேர்தல் பணிக்காக 93. சேந்தமங்கலம் (எஸ்.டி) சட்டமன்ற தொகுதியில் வேதலோக வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 07.04.2024 அன்று நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் அண்ணா நகர் பிரிவு ரோடு வேட்டாம்பாடி, நாமக்கல் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் தேர்தல் பணியின்போது இறந்ததற்கான கருணைத்தொகை ரூ.1500000/- (ரூபாய் பதினைந்து இலட்சங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.