ராசிபுரம் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா..

ராசிபுரம் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இன்னர்வீல் சங்கத்தின் 2024-25-ம் ஆண்டின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இச்சங்கத்தின் புதிய தலைவராக சுதாமனோகர், செயலாளராக சிவலீலாஜோதி கோபிநாத், பொருளாளராக ஆர்.சுதாரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பொறுப்பேற்பு விழாவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.முருகானந்தன், இன்னர் வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரோஜாகுமார் ஆகியோர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். முன்னதாக போராசிரியர் ஆர்.சிவக்குமார் இறைவணக்கம் வாசித்தார். சங்கச் செயலர் சுதா மனோகரன் 2023-24-ம் ஆண்டின் ஆண்டறிக்கை சமர்பித்தார். அமலாக்கண்ணன், ரம்யா தங்கம் ஆகியோர் புதிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினர். இவ்விழாவில் வாசவி கிளப் தலைவர் சந்தியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில் துறையில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நேர மேலாண்மை, நிதி நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தலைமை பண்பு, திட்டமிடல் போன்றவை குறித்துப் பேசினார். இதேபோல் ஆயுஸ் கிளினிக் மருத்துவர் கே.எம்.ஆனந்தி பல்வேறு இயற்கை சிகிச்சை முறைகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் இணைத்து வைக்கப்பட்டார். விழாவில் பால்வாடி மையத்தின் குழந்தைகளுக்கு சேர்கள், பாய்கள், அரசு மருத்துவமனைக்கு தலையணை, படுக்கை விரிப்புகள், கல்வி ஊக்கத்தொகை போன்றவை விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்ற பிற நிர்வாகிகளின் விவரம்: இன்னர் வீல் சங்கத்தின் துணைத் தலைவர் மல்லிகா வெங்கடாஜலம், ஐ.எஸ்.ஒ., கீதா செந்தில்குமார், எடிட்டர் ரம்யா தங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தெய்வானை ராமசாமி, சுகன்யா நந்தகுமார், ஷாகிதா பானு மஸ்தான், ரமணி மனோகர், பத்மாவதி தேவதாஸ், புவனேஸ்வரி மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் ராசி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் எஸ்.சத்தியமூர்த்தி , ரோட்டரி சங்க உதவி ஆளுநர் கு.பாரதி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், ரோட்டரி சஙகச் செயலர் ராமசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story