ராசிபுரம் : தூய லூர்த்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

ராசிபுரம் தூய லூர்த்து அன்னை ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில 100க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறையப்படும் முன்பு ஜெருசலேம் நகருக்கு இயேசு கிறிஸ்து கோவேறு கழுதையில் ஊர்வலமாக வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா என பாடல்கள் பாடியவாறு அவரை வரவேற்றனர். மேலும் கைகளில் குருத்தோலைகள், மரக்கிளைகளை பிடித்தவாறும், தரையில் துணிகளை விரித்தும் அவரை மகிமைபடுத்தினர்.

இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக செல்வது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே இருந்து 100க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story