ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தீடீர் ஆய்வு

ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தீடீர் ஆய்வு

சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய் அபராதம், வாகன வரி, சாலை வரி, தகுதி சான்று இல்லாத கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி பகுதியில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தீடீர் ஆய்வு செய்தார். இப்பகுதியில் இயங்கிவரும் வாகனங்கள் உரிய ஆவணம் இன்றி இயக்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அவர்கள், அதே பகுதியில் உரிய தகுதி சான்று இல்லாமலும், சாலை வரி கட்டாத வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஆட்களை ஏற்றி கொண்டு அபாயகரமாக பயணம் செய்த வாகனத்தை சிறை பிடித்து அபராதம் விதித்தார்.

சாலை வரி மற்றும் தகுதி சான்று (FC) புதிக்கபடாமல் இயக்கிய கனரக வாகனங்கள் என 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், ஹெல்மெட் அணியாமலும் போக்குவரத்துக்கு இடையூறாக செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கிய நபர்களுக்கு அறிவுரைகளை கூறி இனி சாலையில் வாகனம் இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு செல்லக்கூடாது என தெரிவித்து அவர்களுக்கு அபராதம் விதித்தார். இதில் கனரக வாகனம் டிராக்டர்கள் மற்றும் லாரி முதலிய வாகனங்களுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. நிலுவை வாகன வரியாக (TAX) அபராதம் ரூ. 83000, சாலை வரி – 18700, செல்போன் கேஸ் – ரூ. 1500, ஹெல்மெட் கேஸ் ரூ. 7000 என மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியாவுடன் நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story