பந்தலூரில் அரிசியில் எலி எச்சம் பொதுமக்கள் அதிர்ச்சி
அரிசியில் இருந்த எலி எச்சம்
தமிழகம் முழுவது ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் நியாய விலை கடைகள் மூலம் இலவசமாக அரிசியும் வீட்டுக்கு தேவையான பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் முலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பயன் பெறுகின்றனர்.
இந்நிலையில் பந்தலூர் பகுதியில் உள்ள மகளிர் நியாய விலை கடையில் விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் எலி எச்சங்கள், சனல் கயிறு, காங்கிரட்கற்கள் போன்றவை கிடந்ததை கண்டு பயனாளி அதிர்ச்சியடைந்தார். அது குறித்து நியாய விலை கடை ஊழியரிடம் கேட்ட போது," நான் என்ன செய்ய முடியும், அரிசி குடோனில் இருந்து இப்படி தான் அனுப்பப்படுகிறது,"என்றார். மேலும், நான் என்ன செய்ய முடியும் என்றும்,
விருப்பமிருந்தால் வாங்ககுகள், இல்லை எனில் திரும்பி போங்க என நியாய விலை கடை ஊழியர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக பயனாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வரும் நிலையில் எலி எச்சங்கள், கற்கள் போன்றவையுடன் நியாய விலை கடை ஊழியர்கள் வழங்குவது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.