கடலை மிட்டாய் ஆலையில் எலி எச்சங்கள் கலந்த மாவு பறிமுதல்!

கடலை மிட்டாய் ஆலையில் எலி எச்சங்கள் கலந்த மாவு பறிமுதல்!

கடலை மிட்டாய் 

கோவில்பட்டியில் கடலை மிட்டாய் ஆலையில் எலி எச்சங்களுடன் இருந்த 840 கிலோ மாவு மூட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டி ஆகியோா், கோவில்பட்டி பகுதியில் உள்ள கடலை மிட்டாய் ஆலையை ஆய்வு செய்தனா். அந்த சுகாதாரமின்றி காணப்பட்டதோடு, ஆவணங்களை முறையாகப் பராமரிக்காததும் தெரியவந்தது. மேலும், எலியின் எச்சங்கள் படா்ந்திருந்த 840 கிலோ கிழங்கு மாவு, பட்டாணி மாவு, மைதா மற்றும் உரிய லேபிள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 100 கிராம் அளவிலான 5 ஆயிரம் மிக்சா் மிட்டாய் பாக்கெட்டுகள், 800 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுகாதாரக் குறைபாடுடன் இருந்த ஆலையின் உணவுப் பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து, ஆலையின் இயக்கத்தை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

Tags

Next Story