சேரன்மகாதேவி கோவிலில் ரத சப்தமி தீர்த்தவாரி
தீர்த்தவாரி
திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மாதேவியில் அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் நடைப்பெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி, ஸ்ரீனிவாச கல்யாணம் ஆகியவை நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் காலை சிறப்பு திருமஞ்சனம், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி, தொடர்ந்து மதியம் சாற்றுமுறை தீர்த்தம், மாலையில் ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story