ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காப்பேட்டை விலை கடையில் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காப்பேட்டையில் நியாய விலை கடை இயங்கி வருகிறது இதில் சுமார் 817க்கும் மேல் குடும்ப அட்டை உள்ளது.
இந்த அடைதாரர்கள் அனைவருக்கும் முறையான பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஒரு மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே கடை திறக்கப்படுகிறது அப்படியே திறந்தால் கூட வெளியூரில் இருந்து வரும் அட்டைக்கு முன்னுரிமை தந்து விட்டு இங்கு உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளைக்கு வா இன்றைக்கு வா மெஷின் ஒர்க் ஆகவில்லை என்று பலமுறை பொது மக்களை அலைய விடுகிறார்கள்.
அப்படியே மீறி கேட்டால் எந்த கடையில் வேண்டுமானாலும் நீங்கள் பொருட்கள் வாங்கிக் நியாய கொள்ளலாம் ஏன் இங்கே வருகிறீர்கள் என்று பொது மக்களிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். வெளியில் இருந்து வரும் நபர்களுக்கு கள்ளத்தனமாக மூட்டை மூட்டையாக அரிசி கடத்தி விற்பனை செய்கிறார் பச்சை அரிசி 800 ரூபாய்க்கும், புழுங்கல் அரிசி 700 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்.
இது வரைக்கும் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. மீறி கேட்டால் எல்லா அதிகாரியும் என் கைக்குள்ளே நீ எங்கு வேண்டு மானாலும் புகார் செய்யலாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று பொது மக்களை மிரட்டி வருகிறார்கள் வேற யாரும் இந்த கடைக்கு பணியாற்ற வர விடுவதில்லை இவர் ஒரே கடையில் 3.ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார் இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.