ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பைல் படம் 

தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பெரும்பத்து ஊராட்சியில் உள்ள மேட்டூர் ரயில்வே கேட் அருகே நேற்று இரவு நேற்றிரவு கடையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்டமங்கலம் ஆசாரி தெருவைச் சேர்ந்த இசக்கி (33) என்பவர், ஓட்டி வந்த ஆம்னி காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்த 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story