ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குண்டாஸில் சிறையில் அடைப்பு

ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குண்டாஸில் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டம்
கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நெல்லையை சேர்ந்த கோட்டூர் மணி, சுடலைமணி ஆகிய இருவரை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர். இந்த இருவரையும் நேற்று (மே 3) மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவுரை படி பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story