ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை புதுநகர் பகுதியைச் சேர்ந்த அகிலவாணன் இவர் புதுக்கோட்டை அர்பன் ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு திருமணம் செய்து கொண்டுமனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பூங்கா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அவருடைய தந்தை உடல்நிலை குறைவால் காலமானார். கடந்த ஒரு வாரமாக தந்தை இறந்த சோகத்திலேயே ரேஷன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவருடைய மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இரவு நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அகிலவாணன் மாயமானார்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று அதிகாலை புதுக்கோட்டை பாலா நகர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருக்கோகர்ணம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story