நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் இறந்த பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வாரிசு பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சம்பத்து தலைமை தாங்கினார். தலைவர் கோபிநாத், நிர்வாகிகள் பழனிவேல், கதிர்வேல் கண்டன உரையாற்றினர். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுத்தல், பணி வரன்முறைபடுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் இறந்ததை யொட்டி, அவர்களின் பிள்ளைகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், தனசேகரன், விஜய்சிங், சுந்தர், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரஷீத் நன்றி கூறினார்.
