ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

X
நியாய விலைக்கடை பணியாளர் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார். ராஜகோபால், கண்ணன், ஏழுமலை,இளையராஜா, பரசுராமன் உட்பட 100க்கும் மேற்பட்ட மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Tags
Next Story
