கண்டன ஆர்ப்பாட்டம்
பொது விநியோகப் பொருட்களுக்கு அபராத தொகை 3 மடங்காக உயர்த்தி பிறப்பித்த ஆணையை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி ரேஷன் கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர், வி பி தினகரன் தலைமை வகித்தார் மாநில செயலாளர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட துணைத் தலைவர்கள் பழனிஸ்வரன் கோவிந்தன் ஜெகநாதன் மற்றும் மாவட்ட இணை செயலாளர்கள் சேதுபாண்டி ஆசைத்தம்பி மாரிமுத்து திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .
ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோக பொருட்களுக்கு அபராத தொகை மூன்று மடங்காக உயர்த்தி பிறப்பித்த தமிழக அரசு ஆணையை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உணவு பொருட்கள் அனைத்தையும் சரியான இடையில் பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட அஞ்சு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.