ரத்தின விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

X
ரத்தின விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவ்வூர் ரத்தின விநாயகர் கோயிலில் பரம்பரை அறங்காவலர் பெரி.சிதம்பரம் முயற்சியால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்து டன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜை, பூர்ணாஹூதி, யாக கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டதும் இரணியூர் சுப்பிரமணி சிவாச்சாரியார் தலைமையில் புரோகிதர்கள் கோபுரக்கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா அபிஷேகம், அன்னதானம் நடந்தது. விழாவில் நக ரத்தார்கள்,கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
