ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் 112 வது ஆண்டு திருவிழா
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் புனிதஜெர்மேனம்மாள் 112 ஆம்ஆண்டு திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாத உடல் பலம் பெற்ற புனிதஜெர்மேன ம்மாள் 112 ஆம்ஆண்டு திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதைத்தொடர்ந்து திருப்பலி மறையுரை நடைபெற்றது.இதிலிருந்து தினசரி கொடி பவனி,ஜெபமாலை,திருப்பலி நடைபெற்றது. சனிக்கிழமை இரவு திருவிழாதிருப்பலி,தேர் பவனி,நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
மதுரை கரூர் திண்டுக்கல் தேனி விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ராயபுரம் திருவிழா இரவு முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது.இன்று ஞாயிறு புதுநன்மை விழா,தேர் பவனி ,நாளை திங்கட்கிழமை காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் சோழவந்தான்,வாடிப்பட்டி, மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரம்,குடிநீர் வசதிகளை ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.