பள்ளியில் இடை நின்ற மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கிராம காவல், கல்வியும் காவலும் ஆகிய திட்டங்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் இருக்கின்றனரா என்று மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜென்னட் ஜெசிந்தா , குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கதிரவன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து ஆகியோர்கள் .
ஆய்வு செய்து ரஞ்சன்குடி கிராமத்தில் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேலும் கல்வியை தொடர முடியாமல் இருந்த மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து ஏற்பாடுகள் செய்து அம்மாணவியை 24.6.2024-ம் தேதி குன்னம் கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.