கோட்டைக்குளத் தொட்டியில் மீண்டும் கழிவுகள் - மாநகராட்சிக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கை
கோட்டைக்குளத் தொட்டியில் மீண்டும் கழிவுகள்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள கோட்டைக்குளத்தொட்டியில் மீண்டும் கழிவுகள் கொட்ட 'விஷ வாயு' உற்பத்திக்கு வழிவகுக்கிறது. திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் முன் பகுதியில் கோட்டைக்குளத்தொட்டி உள்ளது.தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறும் மாநகராட்சி பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. தொட்டி உருவாக்கப்பட்டதே விநாயகர் சதுார்த்தி,கோயில்களில் நடக்கும் முளைப்பாரி கரைப்பதற்காகதான். அந்த நேரங்களில் மட்டும் தொட்டியை பராமரிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மற்ற நேரங்களில் எதையும் கண்டுக்காது விடுன்றனர். இதனால் தற்போது மழைநீர், கழிவுநீர், அக்கம்பக்கத்தினரால் கொட்டப்படும் குப்பை கழிவுகள் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்த சுகாதாரக்கேட்டின் பிறப்பிடமாக விளங்குகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
Next Story