ஏரியில் ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் நிலம் மீட்பு
நீலம் மீட்பு
திருவள்ளூர், நத்தம் பேடு பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திருவள்ளூர் தாலுக்கா, நத்தம்பேடு கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், மொத்த பரப்பு 429 ஏக்கர் பெரிய ஏரி வகைப்பாடு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., கற்பகம் ஆகியோர் திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன் மற்றும் வருவாய் துறையினர் நத்தம்பேடு ஏரியை அளவீடு செய்தனர்.
அப்போது ஏரியில், 2 ஏக்கர் பரப்பளவில் சிமென்ட் கற்கள் மூலம் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து ஒரு குடிசை அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
Next Story