பட்டாசு ஆலைகள் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

பட்டாசு ஆலைகள் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசியில் வீதி மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்த செய்ய தாசில்தார் பரிந்துரைத்துள்ளார்.


சிவகாசியில் வீதி மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்த செய்ய தாசில்தார் பரிந்துரைத்துள்ளார்.

சிவகாசி மற்றும் சுற்று பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் விதிமீறல்கள் தற்காலிகமாக உரிமத்தை ரத்த செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்த தனி தாசில்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் விதியை மீறி செயல்பட்ட 4 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலைகளில் விதிமீறல் உள்ளதாக என சோதனை நடத்தினர்.

இதில் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான பட்டாக ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறுவது உள்ளிட்ட விதிமீறல்கள் இருப்பதும், புதுக்கோட்டையில் கலைமகள் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உச்ச நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி, தயாரிப்பு உள்ளிட்ட விதி மீறல் இருப்பது,அதைப்போல மங்களம் கிராமத்தில் சோலைஅம்மாள் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விதிமீறி மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில் குமார் பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு கண்டறியப்பட்டது இதையடுத்து தனி வட்டாட்சியர் திருப்பதி 4 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Tags

Next Story