பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து செய்ய பரிந்துரை

பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசியில் விதிமீறி செயல்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


சிவகாசியில் விதிமீறி செயல்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக சரவெடி தயார் செய்த ஆலைக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்ய பரிந்துரை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தில் தங்க முனியாண்டி மகன் மாரிமுத்து சொந்தமான தங்கமணி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது இந்த ஆலையில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியர் திருப்பதி மற்றும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆலையில் விதிமீறல் உள்ளதா என ஆய்வு செய்தனர் ஆய்வில் அந்த ஆலையில் சரவெடி பின்னுவதற்கு உதிரி வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது. மேலும் அந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பின்னி கொண்டிருப்பதும் தெரிய வந்தன. மேலும் உச்சநீதிமன்ற தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றதால் அந்த கடைக்கு தனி வட்டாட்சியர் திருப்பதி சீல் வைத்தார் இது குறித்து வி.சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Tags

Next Story