சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சியில் நீதித்துறை சார்பில் சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 8ம் தேதி முதல் சமரச தீர்வு வார விழா நடந்து வருகிறது. நேற்று சமரச தீர்வு நாளை முன்னிட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கோர்ட் பணியாளர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திலிருந்து ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி இருசன்பூங்குழலி கொடியசைத்து துவக்கி வைத்தார். நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களிடம் சமரச தீர்வு காண்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினர். தொடர்ந்து விழிப்புணர்வு பதாகைகளுடன் கோர்ட் வரை சென்ற ஊர்வலத்தில் கூடுதல் முதன்மை நீதிபதி கீதாராணி, சார்பு நீதிபதி மைதிலி, கூடுதல் சார்பு நீதிபதி தனசேகர், முதன்மை உரிமையியல் நீதிபதி முகமது அலி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சுகந்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிஹரசுதன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசுவாமி, செயலாளர் சீனிவாசன், சிரஸ்தார் மூர்த்தி, சமரச தீர்வாளர்கள் செந்தில்குமார், சங்கர், ராஜா, சிவலோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story