ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தின வார விழா
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட துணை சமரச தீர்வு மையத்தின் சார்பில் சமரச தின வாரவிழாவினையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சங்ககிரி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது .
சமரச தீர்வு மையம் மூலம் பொதுமக்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே இரு தரப்பிலும் பேசி உடனடி தீர்வு காணலாம். இதன் மூலம் இரு தரப்பினர்களுக்கு உடனடி பொருளாதார நன்மை, செலவுகள், நேரம், சிரமங்களை குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என்றார். மேலும் அவர் இம்மையத்தின் மூலம் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தீர்வு காணலாம் எனவும் இது குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கினார்.
அப்போது மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் எண்.1 எஸ்.ஆர்.பாபு, எண்.2 என்.இனியா, வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், சமரச மைய தீர்வாளர்கள் மணிசங்கர், எஸ்.செல்லப்பன், விஜயா, வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை சமரச தின வார விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.