வள்ளல் அதியமான் கோட்டம் புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி (ரூபாய் ஒரு கோடி) மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று கடந்த 27.04.2022 அன்று அறிவித்தார்கள். இதனை தொடர்ந்து, கடந்த 15.03.2023 முதல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்புனரமைப்பு பணிகளை இன்றைய தினம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வள்ளல் அதியமான் மற்றும் ஔவையார் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச்சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். செயற்பொறியாளர் இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்