தற்காலிக செவிலியர் கிணற்றில் சடலமாக மீட்பு

தற்காலிக  செவிலியர் கிணற்றில் சடலமாக மீட்பு

தற்காலிக செவிலியர் மீட்பு 

வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக செவிலியர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதுபிரியா(30) இவர் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கும் அரூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

பின்னர் கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மதுபிரியா ஆலங்காயம் பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை நிம்மியம்பட்டு அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளர்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக ஆலங்காயம் போலிசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story