கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு - சார் ஆட்சியர் நடவடிக்கை

கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு - சார் ஆட்சியர் நடவடிக்கை
X

சார் ஆட்சியர் அனாமிகா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், வந்தவாசி வட்டம், வெளியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சித்தூர் அருகில் உள்ள மதனப்பள்ளியில் கல்குவாரியில் தமது குடும்பத்தாரை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சார் ஆட்சியர் அனாமிகாவிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. இதையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள வேலு என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து சந்திரசேகர் (55), ராமன் (31), ராமகிருஷ்ணன்(36), ஆகிய தொழிலாளர்கள் அதிகாரிகள் குழுவினரால் மீட்கப்பட்டனர். காளியம்மாள் மற்றும் மீட்கப்பட்டோரின் குடும்பத்தார் சார் ஆட்சியர் அனாமிகாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story