கோவிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.
திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு. திருப்பூர் தெற்கு வட்டம் முத்தணம்பாளையம் கோவில்வழி அருகே, அழகு நாச்சியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதனை தனியார் நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் ஜெயதேவி மற்றும் தாசில்தார் (ஆலய நிலங்கள்) மற்றும் ஓய்வு பெற்ற தாசில்தார் சபாபதி, திருக்கோவில் தக்கார் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தனியார் வசம் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது-. இதனைத்தொடர்ந்து 37 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் நேற்று மீட்டனர். மேலும், அங்கு கோவிலுக்கு சொந்தமான நிலம் என விளம்பர பதாகையும் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2.50 கோடி ஆகும்.
Next Story