கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சடலம் மிதப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாா் லால்குடி தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனா். சடலமாக கிடந்த நபா் 60 வயது மதிக்கத்தக்க அளவில் சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து காணப்பட்டாா். மேலும் அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்தனவாம். சடலத்தை மீட்ட லால்குடி போலீசாா் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை நடத்திவருகின்றனா்.

Tags

Next Story