ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் மண்டபம் மீட்பு
கோயில் மண்டபம் மீட்பு
கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த பகவத் படித்துறை மண்டபத்தை அறநிலையத் துறையினா் நேற்று மீட்டனா்.
கும்பகோணம் காவிரி தென்கரையில் நாகேஸ்வரா் கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள பகவத் விநாயகா் கோயில் உள்ளது. இதையொட்டி உள்ள மண்டபத்துக்குள் 8 மாதங்களாக ஒரு குடும்பத்தினா் ஆக்கிரமித்து, மண்டபத்தில் உள்ள மின்சாரத்தை, உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக கோயில் நிா்வாகத்துக்குப் புகாா் சென்றது. இதன்பேரில் அறநிலையத் துறைச் செயல் அலுவலா் சி. கணேஷ்குமாா், ஆய்வாளா் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் தொடா்புடைய மண்டபத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பில் இருந்த மண்டபத்தை மீட்டு, மின் இணைப்பைத் துண்டித்தனா். பின்னா் ஆக்கிரமிப்பாளா்களின் பொருள்களை மண்டபத்தின் வெளியில் வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் சிறிய வழியை விட்டு, மீதம் உள்ள பகுதியைப் பூட்டி சீல் வைத்தனா்.
Next Story