கொடைக்கானலில் திருடிய நகை மீட்பு

கொடைக்கானலில் திருடிய நகை மீட்பு

கொடைக்கானலில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய வாலி வரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.


கொடைக்கானலில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய வாலி வரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் தாலுகா பெருமாள் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர் 54 தனியார் ஓட்டலில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த 21ஆம் தேதி ஹோட்டலில் விடுப்பு எடுத்து வந்து தனது குடும்பத்தினருடன் புது துணிகள் வாங்க கடைக்கு சென்று உள்ளார். திரும்ப வந்து பார்த்தபொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனதாக போலீசில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் எஸ்ஐ சேகர் குற்றப்பிரிவை சேர்ந்த சரவணன், ராமராஜன், காசிநாத் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தியதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அம்மாபேட்டையைச் சேர்ந்த மணிபாலன் 25 பஸ்ஸில் சுற்றுலா வந்த பொழுது பெருமாள் மலையில் இறங்கி டீ குடித்துள்ளார் அப்போது வீடு பூட்டி இருந்ததை கண்டு அதன் பூட்டை உடைத்து திருடியது தெரிய வந்தது இதனை எடுத்து அவரிடம் இருந்து 9 பவுன் நகையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story