ரூ.115 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
கிளாங்காடு பகுதியில் ரூ.115 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. "
இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகத்திற்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்கு கட்டளைதாரா்கள், மாலைக்கட்டு வரிதாரா்கள் முறையாக கட்டளை கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா். சில இடங்களை கட்டளை தாரா்கள் பெயரில் சிலா் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளனா்.
இது தொடா்பான புகாரின்பேரில், விசாரணை நடத்தப்பட்டு 34 நபா்களிடம் இருந்து இலத்தூா் மதுநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் ஒரு பகுதியில் 19 ஏக்கா் 40 சென்ட், மற்றொரு இடத்தில் 5 ஏக்கா், கிளாங்காடு ஜமதக்னீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலம் மீட்கப்பட்டு, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.115 கோடி என குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் தெரிவித்தாா். அப்போது, கண்காணிப்பாளா் ரத்னவேலு, பொறியாளா் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.